புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் உள்பட உயிரிழந்த 10 பேரின் உடல்களை தெலுங்கானாவுக்கு ஏற்றிச்சென்ற தமிழகத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அந்த மாநில அரசு அங்கு நேற்று சால்வை அணிவித்து கௌவுரவித்தது.
தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நர்சபூர் பகுதியை சேர்ந்த 14 அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஐய்யப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் மீது, புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 9 ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயத்துடன் வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை அப்பகுதி பொதுமக்களும் மீட்பு குழுவினரும் மீட்டு புதுக்கோட்டை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் உயிரிழந்வர்களின் உடல்களை தமிழக அரசு செலவிலேயே இறந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழக அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் 10 ஆம்புலன்ஸ்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நர்சபூரில் அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதோடு உயிரிழபந்தவர்களின் உடலை உடனே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தமிழக அரசை தெலுங்கானா அரசு பாராட்டியதுடன். நர்சபூருக்கு உடல்களை ஏற்றி சென்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தெலுங்கானா அரசு சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நர்சபூர் வட்டாட்சியர் பிக்சாபதி மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.