Skip to main content

கோவையில் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார்; 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்!!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

 

கோவையில் கல்லூரி தாளாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி பேருந்துகளை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

kovai

 

கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. 23 வயதாகும் இவர் திருமணமாகதவர். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கோவை சரவணம்பட்டி பகுதியில் மிக பிரபலமான இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பரமணியம், 64 வயதான இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களை பின்னால் சென்று கண்டுபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் ஆக இருந்து வந்துள்ளார். 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை செய்து வந்துள்ளார். தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் புவனேஸ்வரிக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

 


இந்த பரபரப்பு குற்றசாட்டு தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 15 பேருந்துகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் சமாதானம் செய்து மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்