Published on 26/04/2022 | Edited on 26/04/2022
சென்னை அருகே வல்லூர் அனல் மின்நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்திப் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் இணைந்து தினமும் மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று அனல் மின்நிலையத்தின் மூன்றாவது அலகில் கொதிகலன் பழுதின் காரணமாக, 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பின்னர், பழுது நீக்கப்பட்டு நேற்று (25/04/2022) மீண்டும் மின்உற்பத்தித் தொடங்கியது. இந்த நிலையில், முதலாவது அலகில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்புப் பணிகளில் மின்நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.