Skip to main content

டீ கடை, முடிவெட்டும் நிலையங்களுக்கு மீண்டும் தடை! 

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

Vellore District

 

கரோனா பரவல் குறைவாக இருந்த மாவட்டங்களில் தமிழகத்தில் வேலூர் மாவட்டமும் ஒன்று. ஆனால் தற்போது அது 10 மடங்கு வேகத்தில் பரவுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படுகிறது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அதாவது ஜீன் 5ஆம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. தற்போது ஜீன் 18ஆம் தேதி இரவு வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408. ஒரே நாளில் 103 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிக எண்ணிக்கை இது தான்.

 

எனவே வியாபார சங்கங்கள் உட்பட பல வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பேசி அதிரடியாக ஜீன் 19ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் மளிகை, காய்கறி‌கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காய்கறி கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டும் செயல்படும். மளிகைக்கடைகள், துணிக்கடைகள், ஹார்ட்வேர் கடைகள், நகைக்கடைகள் உட்பட அனைத்துவிதமான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும். இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமை மட்டும் அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது. ஹோட்டல்களும் வாரத்தில் 3 நாட்கள் மாலை 6 மணிவரை மட்டும்மே, பார்சல் மட்டும்மே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள், உழவர் சந்தைகள் தினமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகள், ஸ்பாக்கள், முடிவெட்டும் நிலையங்களுக்கு ஜீன் 30ஆம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp

 

இந்தக் கட்டுப்பாடுகள் ஜீன் 20ஆம் தேதி முதல் மாவட்டத்தில் நடைமுறைக்கு வருகிறது என உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

 

 

சார்ந்த செய்திகள்