சிவகாசியில் அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஏழுபேரில் மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் ரட்சன் தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு அரசு மதுபானக்கடையில் நேற்றிலிருந்து ஏழு நபர்கள் கூட்டாக மது அருந்தியுள்ளனர். அதேபோல் சிவகாசியில் உள்ள மற்றொரு அரசு மதுபானக்கடையில் தொடர்ந்து இன்று மது அருந்தியுள்ளனர். இப்படி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற அனைவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் இறந்துள்ளனர்.
கணேசன் (20), கவுதமன் (15), முகமது இப்ராகிம் (22) ஆகியோர் மதுவினால் இந்த சம்பவத்தில் இறந்துள்ளனர். இவர்களுடன் மது அருந்திய மற்ற ஐந்து பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் பராசக்தி காலனியில் உள்ள மற்றொரு மதுபானக்கடையில் மது அருந்தி தலைசுற்றல் ஏற்பட்டதாக இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் குறிப்பிடும் பொழுது மதுவில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விஷம் எப்படி கலக்கப்பட்டது என்பதுபற்றி போலீசார் ஏழு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லாது மதுவே விஷமானதா? என அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.