Skip to main content

டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...???

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு டாஸ்மாக் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

tasmac

அப்போது ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள், மதுவிற்பனை இரவு 10 மணி வரை உள்ளது. அதனை இரவு 8 மணியாக குறைக்க உத்தரவிட வேண்டும். சென்னையில் விற்பனை தொகையை அரசு வங்கி மூலம் வசூல் செய்வதுபோல் அனைத்து மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.


 

 

டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் பென்‌ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர். மாநிலத்தலைவர் ராமானுஜம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிறுவனத்தலைவர் வி. சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணி, மாவட்டத்தலைவர் சிங்காரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 

 

சார்ந்த செய்திகள்