Skip to main content

கோயில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது?- இந்து அறநிலையத்துறையிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

chennai high court tn govt temples list

 

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என, இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர் பெயர், தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக் கூடியவரா என்பது போன்ற விவரங்களை, அந்ததந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயிலின் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கோயில் அறங்காவலர் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகள் விவரங்களை கோயில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிடக் கூடாது? எனத்  தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பினர்.

 

இதற்கு அரசுத் தரப்பில் விரிவான பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 17- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்