Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,428 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,913 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் சுமார் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை வீழ்த்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.