Skip to main content

“பெண்களை நிம்மதியாக வாழவிடு..”-விருதுநகரில் காங்கிரஸ் எழுப்பிய கோஷம்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

Tamilnadu Tasmac open issue - Virudhunagar Congress

 

அவசரகதியில் டாஸ்மாக் திறந்ததற்கும்,   மாநில அரசு கோரிய நிதியை வழங்காததற்கும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டு கலைவதென்று,  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர்  எடுத்த முடிவினை வரவேற்று, தமிழக காங்கிரஸ் கட்சியினரும், இந்தக் கண்டனப் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று,  அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், கே.எஸ்.அழகிரி.


இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில்,  மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் வீட்டு முன்பாக, கருப்பு துண்டு அணிந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், அக்கட்சியினர். 

அப்போது,  ‘வாழவிடு.. வாழவிடு.. பெண்களை நிம்மதியாக வாழவிடு.. கெடுக்காதே.. கெடுக்காதே.. இளைஞர்களைக் கெடுக்காதே.. வாழவிடு.. வாழவிடு.. அடுத்த தலைமுறையை வாழவிடு..’ என கோஷங்கள் எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்