Skip to main content

சசிகலா வருகை... அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் நேரில் பரபரப்பு புகார்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

Sasikala visit ... AIADMK ministers complain to DGP in person!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சசிகலா தமிழகம் கிளம்புவார் என டி.டி.வி.தினகரன்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறித்து சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம் நகர அதிமுக நிர்வாகிகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது எனப் புகாரளித்துள்ளனர்.

 

Sasikala arrival ... AIADMK ministers complain to DGP in person!

 

இந்த புகாருக்கு பின் அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனைபெற்ற சசிகலா சென்னை திரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் சசிகலாவும், தினகரனும்  தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். டிஜிபியிடம் அல்ல முப்படை தளபதிகளிடம் புகாரளித்தாலும் எங்களை தடுக்க முடியாது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்படுகிறார். அதிமுக கொடியை சசிகலா பயன்டுதகூடாது. மனித வெடிகுண்டாக மாறி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அவரது சதித்திட்டத்திற்கும் அதிமுகவிற்கும்  எந்த சம்பந்தமும் கிடையாது'' என்றார்.

 

நேற்று (05.02.2021) தென்காசியில் திருமலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார். டிஜிபியிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்