தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி அலுவலகம் - 11 செ.மீ., மண்டபம் (ராமநாதபுரம்) - 6 செ.மீ., பெரம்பூர் (சென்னை), ஆலந்தூர், செங்குன்றம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி தலா 5 செ.மீ., பொன்னேரி (திருவள்ளூர்) பெரியகுளம் (தேனி), சோழவரம் (திருவள்ளூர்), எம்.ஜி.ஆர்.நகர் (சென்னை) தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.