தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடி (ராமநாதபுரம்)- 11 செ.மீ., கீழ்கோதையாறு (கன்னியாகுமரி)- 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.