வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 27, 28- ஆம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை)- 3 செ.மீ., பூண்டி (திருவள்ளூர்)- 2 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.