Published on 06/12/2020 | Edited on 06/12/2020
'மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.' இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.