Skip to main content

"சோதனை அதிகரிப்பால் அதிக பாதிப்பு கண்டறிய முடிகிறது"- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

TAMILNADU HEALTH MINISTER VIJAYA BASKAR PRESS MEET CORONAVIRUS


சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு 81 நடமாடும் மருத்துவக்குழு சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னையில் 61, செங்கல்பட்டுக்கு 10, திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கு தலா 5 நடமாடும் மருத்துவக் குழு சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 


அதேபோல் இரண்டாயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் பணியின் போது இறந்த ராஜீவ்காந்தி மருத்துவமனையின் தலைமைச் செவிலியர் பிரசில்லா குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவியையும் அமைச்சர் வழங்கினார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்ற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  
 

TAMILNADU HEALTH MINISTER VIJAYA BASKAR PRESS MEET CORONAVIRUS


சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், உயர் அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

TAMILNADU HEALTH MINISTER VIJAYA BASKAR PRESS MEET CORONAVIRUS

 


பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னையில் சிகிச்சை அளிக்க கூடுதல் சிறப்பு மருத்துவர்களைப் பணியமர்த்தியுள்ளோம். நெருக்கடியான காலத்தில் ஆர்வத்துடன் பணிக்கு வந்துள்ள மருத்துவர்களுக்குப் பாராட்டுகள். ஆறு மாதங்களுக்குப் பணி நியமன ஆணை பெற்ற 2,000 செவிலியர்கள் இன்று பணியில் சேருகின்றனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது. கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்களுடன் 254 வாகனங்கள் சென்னை மாநகராட்சி பணியில் உள்ளன. 
 

TAMILNADU HEALTH MINISTER VIJAYA BASKAR PRESS MEET CORONAVIRUS


சென்னையில் வெள்ள பாதிப்பின்போது சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இப்போதும் களமிறங்கியுள்ளனர். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்படுகின்றன. தொற்று தெரிய வந்ததும் மருந்து, மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாமல் அடையாளம் காணப்படுகின்றனர்.
 

http://onelink.to/nknapp


நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தில் சோதனை அதிகரிப்பால் அதிக கரோனா பாதிப்பைக் கண்டறிய முடிகிறது. சென்னையில் கரோனா சிகிச்சைக்காகப் படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன" என்றார். 


 

சார்ந்த செய்திகள்