Skip to main content

மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து கூடுதல் மனுதாக்கல்!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மருத்துவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஆறாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவர் கூட்டமைப்பினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. 

TAMILNADU GOVT DOCTORS STRIKE INVITE TN GVOT


இதனிடையே அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி சென்னைக்கு உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் சூர்யபிரகாசம். அந்த மனுவில் மருத்துவர்கள் போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியும், அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதாக  இருந்தாலும், மக்கள் சிகிச்சையின்றி பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்