Skip to main content

பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று (10/07/2021) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பின்பு, டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். 

 

இந்த நிலையில் இன்று (10/07/2021) மாலை 04.00 மணிக்கு டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார்.

 

டெல்லி பயணத்தின் போது, தமிழக அரசியல் சூழல், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசித்ததாகத் தகவல் கூறுகின்றன.

 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

சார்ந்த செய்திகள்