தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (14/05/2021) உத்தரவிட்டுள்ளார். இதில் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் வி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி.யாக ஜெயராம், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக தினகரன், ஆயுதப்படை ஐ.ஜி.யாக லோகநாதன், தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக ராஜேந்திரன், சேலம் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையராக மூர்த்தி, தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக செந்தில், மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மகேஷ்வரன், சட்டம் & ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அருளரசு, காவல்துறை நிர்வாக உதவி ஐ.ஜி.யாக பி.சரவணன், குழந்தை & மகளிர் குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக சுரேஷ் குமார், வணிகக் குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.