Skip to main content

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Tamilnadu Fishermen arrested  by Srilankan coastguard

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரனுக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று காலை மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர். 

 

விசைபடகில் இருந்த காமராஜ், செல்லையன், பூவரசன், அன்பு, பாலு, செல்லத்துரை, முருகானந்தம், ஸ்டீபன், முருகன் ஆகிய 9 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும்  இலங்கை திரிகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மீனவர்களையும், படகையும் மீட்டுத் தரவேண்டும் என மீனவர்களும், அவர்களின் உறவினர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்