Published on 16/12/2020 | Edited on 16/12/2020
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். பாடத்திட்டங்கள் 9- ஆம் வகுப்பு வரை 50%, 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கு 35% குறைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலந்து ஆலோசித்தபிறகு முடிவு செய்யப்படும்." என்றார்.
கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.