Published on 13/04/2020 | Edited on 14/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,75,636 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 68,57,344 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 1,63,477 வழக்குகள் பதிவாகியுள்ளன.