பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வரின் கடிதத்தில், 'பட்டாசுகள் விற்பனை, பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டு மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவர்.
காற்று மாசு, ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை ஏற்படாது. உச்ச்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, ஒடிஷா, ராஜஸ்தானில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும், பட்டாசு விற்பனை செய்வதற்கான நீக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.