Published on 08/10/2020 | Edited on 08/10/2020
கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 399.93 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "21/07/2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது. தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் ரூபாய் 1 கோடி, நீதித்துறை பணியாளர்கள் சார்பில் ரூபாய் 49.56 லட்சம், கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாரத்தான் சார்பில் ரூபாய் 23.41 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
07/10/2020 முடிய முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூபாய் 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும்". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.