Skip to main content

"மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 18/02/2021 | Edited on 19/02/2021

 

tamilnadu cm election campaign at tenkasi district

 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். ரூபாய் 20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். நெல்லையிலும் விவசாயிகளுக்குப் பிரம்மாண்ட சந்தையைக் கட்ட அரசு பரிசீலிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி சிறக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். 

 

விவசாயிகளை மதிக்காத ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடத்தை விவசாயிகள் புகட்டுவார்கள். நேர்மையான முறையில்தான் ஆட்சியமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என நினைத்தால் முடியாது. அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்காலம். தமிழகத்தில் யாருக்கும் வீடு இல்லை என்ற நிலையை உருவாக்கக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்