சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று (12/09/2021) காலை நடைபெற்றது. பாரதியார் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் பாரதி சுடரை வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவியிடம் முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாரதியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்; பாரதியார் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார். வானவில் பண்பாட்டு மையம் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும். தமிழ்நாடு அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது. பாரதியார் குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.