Published on 02/06/2020 | Edited on 02/06/2020
![Tamilnadu Chief Minister meets Governor for the third time](http://image.nakkheeran.in/cdn/farfuture/HKFUT6_1xE2Eku9SzJacy7ng2vOOZQsYMcdkjgx__Fs/1591098387/sites/default/files/inline-images/ggfhyfhyyryry.jpg)
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக ஆளுநருடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களில் தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்திக்கிறார். தற்பொழுது நடைபெறும் இந்த சந்திப்பில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.