சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரவி உள்ளது. குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.