Skip to main content

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படுமா?

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
tamil


2018 - 19ம் நிதியாண்டுக்கான, தமிழக பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரி உயர்வு இருக்குமா? அல்லது வரியில்லாத பட்ஜெட்டாக இருக்குமா? என்றும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட் உரையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் அன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில், சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்?, பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் விவாதம் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்? அந்த விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் என்றைக்கு பதிலளிக்க வேண்டும்?, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டும்? ஆகியவை உள்பட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும். அதுபற்றிய அறிவிப்புகளை சபாநாயகர் ப.தனபால் இன்று வெளியிடுவார்.

சார்ந்த செய்திகள்