Skip to main content

வீடியோக்கள் ரிலீஸ்! விசாரணை வளையத்தில் செய்தித்துறை! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

TAMILNADU ASSEMBLY MEETING VIDEO RELEASING

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானத்தின் மீது பேசினர். சட்டப்பேரவையில் நடந்த விவாதங்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வீடியோவாகப்  பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை செய்தித் துறையின் முக்கிய அதிகாரிகளின் மேற்பார்வையில் அத்தகைய வீடியோக்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

 

அ.தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மின் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் பேசிய பேச்சுக்கள் குறிப்பிடத்தக்கவை. அவர்களின் முழுமையான வீடியோவையும் செய்தித் துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த வீடியோக்கள் ரிலீஸ் செய்வதில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சபாநாயகர் தரப்பில் விசாரித்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய ஆசாமி; காப்பு போட்ட காவல்துறை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Police action on Worker who threatened women by making obscene videos

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். 

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.