Published on 08/01/2020 | Edited on 08/01/2020
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று (08.01.2020) நடந்தது. இதில் மூன்று சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூட்டுறவு சங்கத்தலைவர், உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் வழங்குகிறது. அதேபோல் மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் வயது வரம்பை உயர்த்துவதற்கான மீன்வள பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் தாக்கல் செய்தார்.
அதன் தொடர்ச்சியாக வேளாண் விளைப்பொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவை தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பேரவையில் தாக்கல் செய்தார்.