தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை- 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 23 மாவட்டங்களில் கடைகள் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரக்கடைகள், பேன்சி, அழகு சாதனப்பொருட்கள் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன், அதைச் சார்ந்தப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கணினி, மென்பொருட்கள், மின்னணு சாதன உதிரி பாக விற்பனை கடைகள் இயங்கலாம். காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மேற்கண்ட கடைகள் இயங்க அனுமதிக்கப்படும்.
சாலையோர உணவுக் கடைகளில் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியின்றி 50% பயணிகளுடன் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் வரும் ஜூன் 28- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.