மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று (29/10/2021) பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழறிஞர்கள் வரதராஜன், திருமலை, அருணகிரி, ராமசாமி, மாரியப்பன் முரளி, உல. பாலசுப்பிரமணியன், தா. கருப்பையா, ப. சந்தானம், ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ராணி ஆகியோர் சந்தித்து, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், பேரறிஞர் அண்ணாவால் மதராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றிய ஜூலை 18ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாடுவதுதான் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.