தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 12,140 அஞ்சல் அலுவலகங்களின் வழியாக அஞ்சல், சிப்பம், பணம் பரிமாற்றம், வங்கி, காப்பீடு மற்றும் இதர சேவைகளை வழங்கிவருகிறது. வளர்ச்சி மற்றும் சவால்களை சந்திக்க அஞ்சல் சேவைகள் அவ்வப்போது மேம்படுத்தப்படுகின்றன. 2020 - 21ஆம் ஆண்டில் தமிழக தபால் துறை ரூ. 1075 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியிலும், வருவாய் ஈட்டுவதிலும் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்திய அளவில் முன்னோடியாக இருக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடின் மூலம் 872 கோடி பிரீமியத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 6.20 லட்சம் அஞ்சல் ஆயுள் காப்பீடுகளும் 38.40 லட்சம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளும் உள்ளன. தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவிட் 19 தொற்று பேரிடர் சமயத்திலும், ஒவ்வொருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருந்தபோதும் வீட்டு வாசலுக்குச் சென்று அத்தியாவசிய அஞ்சல் சேவையை வழங்கினர்.
இவர்தம் சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 97 விருதுகள் மற்றும் கேடயங்கள் சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினர் ஷம்பு கல்லோலிகர், முதன்மைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியோரால் வழங்கப்பட்டன.