Published on 21/01/2021 | Edited on 21/01/2021

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஃபிப்ரவரி 2ஆம் தேதி கூட்டப்பட இருப்பதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஃபிப்ரவரி 2-ல் தொடங்குகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முன்புபோலவே கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.