தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக 54 வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர், இணை வேந்தர், சிறப்பு விருந்தினர் என்பதற்கு மாறாக, வேந்தர், கௌரவ விருந்தினர், இணை வேந்தர் என பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது ஏற்கத்தக்கது அல்ல என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், அந்த பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல் பட்டமளிப்பு விழாக்களை ஆளுநர் அரசியலைப் புகுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வைத்திருந்தார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை மாலை மீண்டும் சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக பாஜக அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த தகவல்களை மேலிடத்தில் விவரிக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும் விவரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.