Skip to main content

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021


சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று (10/11/2021) நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளைக் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி வாயிலாக நேரடியாகக் கேட்டறிந்தார். 

 

இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்