Skip to main content

தமிழகத்தில் யாருடன் கூட்டணி? -பிரதமர் மோடி தெளிவுரை.

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
modi





தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். 

 

அப்போது, தமிழக மக்களுக்கு அவர் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் நிர்வாகிகள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் தந்தார். 
 


"தமிழகத்தில் பா.ஜ.க. யாருடன் கூட்டணி அமைக்கும்?"  என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, "தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜ.க.வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பா.ஜ.க. செயல்படும். அரசியல் பிரச்னைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே. மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணியுடனே பா.ஜ.க. ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பா.ஜ.க. தயாராக உள்ளது" என்றார் அழுத்தமாக.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்