Published on 07/10/2019 | Edited on 07/10/2019
தவசி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் குமுளி அருகே சினிமா படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் முகவரி கேட்பது போல் நடித்து பிரமலமானவர் கிருஷ்ணமூர்த்தி. நான் கடவுள், விஜய் ஆண்டனி நான் உள்ளிட்ட படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார்.