Skip to main content

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய அமைச்சரிடம்  டி.ஆர்.பாலு கடிதம்..! 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

T R Balu Letter to Union Minister demanding to find missing Tamil Nadu fishermen ..!


மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவான டவ் தே புயல், அதி தீவிர புயலாக உருமாறி, கடந்த 17ம் தேதி  குஜராத்தில் கரையைக் கடந்தது. இந்த புயலின்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடலில் காணமால் போனார்கள். 

 

இந்நிலையில், கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (21.5.21) திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

 

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இன்று டி.ஆர்.பாலு, புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

 

இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடுல் பணி துரிதப்படுத்தபடும் என்று  தமிழக முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்