திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 88 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து 70 மணி நேரமா மீட்புப்பணி தொடர்கிறது.
இந்த மீட்பு பணியில் 25.10.2019 அன்று முதற்கட்டமாக மணப்பாறையை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை குழியில் ஆழத்தில் சென்றதால் மீட்க முடியாமல் இருந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர், எஸ்.பி, அடுத்த 1.00 மணி நேரத்திற்குள்ளாக சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர்.
இதற்கு அடுத்து குழந்தையை ஆழ்துளை கிணற்றிலிருந்து, மீட்க மதுரையிலிருந்து மணிகண்டன் மற்றும் ராஜ்குமார். திருச்சி டேனியல், கோவை பேராசிரியர் ஸ்ரீதர் (கற்பகம் பல்கலைக்கழகம்) மணப்பாறை ரூபன் குமார், நாமக்கல் வெங்கடேசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செந்தில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், மணப்பாறை மாதா போர்வெல், கோவை டெல்டா ஸ்குவார்டு, புதுக்கோட்டை வீரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுவன் 30அடி ஆழமுள்ளவரை மீட்க முயன்றனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவன் சற்று 72 அடி ஆழத்திற்கு கீழே சென்று விட்டார். இதனால், சிறுவனை மீட்பதற்கு ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றிற்கு இணையாக அருகில் இரண்டு மீட்டர் தூரத்தில், கீழ்நோக்கி 98 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
L&T நிறுவனத்தார் ONGC நிறுவனத்தின் அணுகுமுறையின்படி, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீயணைப்புத் துறையின் மூலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு கருவிகள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட அவசர கால மீட்பு ஊர்தி, ஜெனரேட்டர், 8 BA Set (பிரித்திஷ் அபா ரைடஸ்) 8 300 BAR சிலிண்டர், 1 ஏர் லிப்டிங் பேக், 1 பிரெட்பரர் மற்றும் கட்டர், 1 iஉறட்ராலிக் ஜாக்கி, 1 டெமலிவுன் கட்டர், 1டோவின் செயின் ஜெட், 1 மேனுவல் லாக் கட்டர், 1 மேனுவல் ஏர் லிப்டிங் பேக், 50 டார்ச் லைட், 1 பைபர் ஸ்டெரச்சர், 1 ரோலிங் ஸ்டெரெச்சர் பயன்படுத்தப்பட்டன. மதுரை மாவட்ட அவசர கால மீட்பு ஊர்தி, ஒரு ரோட்டரி Nஉறமர், ஒரு டெமாலின்வுன் கட்டர் பெரியது, ஒரு டெமாலின்வுன் சிறியது, ஒரு பிரித்திங் அப்பாரடைஸ், ஐந்து 300 Bar Air சிலிண்டர் , தலா 1 கான்கிரிட் கட்டர், (பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்கல்), 6 புல்பாடி கார்டன் செட், ரோப்கயிறு, ஒரு போர்டபிள் ஜெனரேட்டர், இரண்டு ஹைட்ராலிக் வயர்காட், ஒரு ஸ்பெட்டர் அண்ட் கட்டர் பெரியது, ஒரு காம்பீல்டு, ஒரு உறட்ராலிக் ஜாக்கி, ஒரு லிப்டிங் Air Batch and Set, இரண்டு 100 பீட் ரோப் லைன், ஒரு பைபர் ஸ்டெரச்சர், ஒரு ரோப் லெட்டர் பெரியது, ஒரு டோவிங் செயின் செட், ஒரு டென்ட் செட், ஒரு எலக்ட்ரிக்கல் வயர்காட் (120 பீட்), ஒரு மேனுவல் லாக் கட்டர், மூர்ச் சார்ஜ்லைட் மற்றும் மதுரை மாவட்டம் வாட்டர் மிஸ்ட் டெண்டர், ஒரு மங்கிரோப் 100 பீட், 1 புல்பாடி கார்னஸ், 1 டெண்ட், 2 iஉறட் லைட், 1 மண்வெட்டி, 2 கடப்பாரை, 1 நைலான் கயிறு, 1 பிக்கி ஆப்ஸ் கரூரிலிருந்து 1 வாட்டர் மிஸ்ட் டெண்டர், சிறிய ரக வாகனம், 2 வாட்டர் டெண்டர் ஆலியவற்றுடன், 20 அலுவலர்கள், 200 தீயணைப்பு படைவீரர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், பத்து ஸ்டேசன் தீயணைப்பு அலுவலர்கள் ஆகியோர் பணியில் உள்ளனர்.
மேலும் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர்கள், ஒரு நடமாடும் தீவிர சிகிச்சை வாகனம், 108 இரண்டு ஆம்புலென்ஸ் ஊர்திகள் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள், உயிர் காக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இப்பணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும், தொலைபேசியின் வாயிலாக சிறுவனை மீட்கும் பணியின் முன்னேற்றம் குறித்தும் தகுந்த ஆலோசனை வழங்கியும் வருகிறார்.
சிறுவனின் தாய் மற்றும் தந்தையிடம் அமைச்சர் பெருமக்கள், அரசு முதன்மை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மீட்கும் பணி குறித்து எடுத்துரைத்து ஆறுதல் கூறிவருகிறார்கள்.
தற்போது L&T நிறுவனம் லார்சென் & டூப்ரோ இந்தியா மும்பையில் தலைமையிடமாக கொண்டு உலக முழுவதும் கட்டுமான தொழிலில் செய்து வருகிறார்கள். ONGC NHAI ஆகிய நிறுவனங்கள் ONGC இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பணிகளை இந்தியா முழுவதும் செய்து வருகிறது. இந்த தனியார் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இயந்திரங்களை கொண்டு தான் மீட்பு பணி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த வகையான இயந்திரங்கள் இல்லாமல் இருப்பது பெரிய ஏமாற்றமே என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.