Published on 11/05/2020 | Edited on 11/05/2020
மது விற்பனை தடைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு கடந்த 7ஆம் தேதி தமிழக சென்னை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதற்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. கரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் கடந்த 8 ஆம் தேதி, உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கபில் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.