காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் தற்பொழுது வயதும் இல்லாமல் போய் விட்டது.
கேவைமாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் முருகன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகள் செல்வியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொடுத்தும்கூட கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 28 வயதான செல்வி கோர்ட்டில் விவகாரத்து வாங்கி கொண்டு தனது தந்தைக்கு உதவியாக ஓட்டலில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் தொகுதிக்கு உட்பட்ட எரியோடு பாண்டிய நகரை சேர்ந்த ஆறுமுகசாமியின் 17 வயதான சிறுவன் செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் சண்டை போட்டு கோவித்து கொண்டு மேட்டுப்பாளையம் போனவன் அப்பகுதியில் உள்ள முருகன் ஓட்டலில் வேலை கேட்டு இருக்கிறான். முருகனும் மனிதாபிமான அடிப்படையில் அந்த சிறுவன் செல்வத்தை வேலைக்கு சேர்த்து கொண்டார்.
அதன் அடிப்படையில் சிறுவன் செல்வமும் ஓட்டலில் சப்ளை பண்ணி கொண்டு அங்கையே தங்கி வந்தான் இதனால் ஓட்டல் முதலாளிமகள் செல்விக்கும் செல்வத்தும் முதலில் பேச்சு வார்த்தைதான் இருந்து வந்தது அது நாளடைவில் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலாக மாறியது. அதனையடுத்து இருவரும் தனியாக சென்று பேசிகொண்டு ஓட்டலை விட காதலை வளர்ப்பதில் தான் ஆர்வம் காட்டி வந்தவர்கள். கடைசியில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போய்விட்டனர். இருந்தாலும் இருவருக்கும் வயது வித்தியாசம் ஏற்படுவதின் மூலம் இருவீட்டிலையும் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என முடிவு செய்த காதல் ஜோடிகலான செல்வியும் செல்வமும் கடந்த வாரம் திடீரென ஓட்டலில் இருந்து ஓடி விட்டனர்.
அதை கண்டு செல்வியின் தந்தையான முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற முருகன் என் ஓட்டலில் வேலைபார்த்து வந்த சிறுவன் செல்வம் என் மகள் செல்வியை கூட்டி கொண்டு ஓடிப்போய் விட்டான் என கண்கலங்கியவாரே புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் பல இடங்களில் தேடியும் வந்தனர்.
இந்த நிலையில் தான் வயதுக்கு மீறி காதலித்து திருமணம் செய்ய போகும் ஓட்டல் உரிமையாளர் மகள் செல்வியை தனது ஊரான எரியோட்டில் உள்ள பாண்டியராஜன் நகருக்கு செல்வம் கூட்டிகிட்டு வந்தான் அதை கண்டு அதிர்ச்சி பெற்றோர்களும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதொடு இருவரையும் சத்தம் போட்டனர். இதை கண்ட செல்வியும் செல்வமும் எங்களை சேர்த்து வைக்க மாட்டீங்க என நினைத்து அரளிவிதை அரைத்து திண்ணு விட்டோம் என திடீரென நாடகம் மாடி மயங்கி விழுவது போல் விழுந்தனர். அதை கண்டு பெற்றோர்களும் உறவினர்களும் பதறி அடித்து கொண்டு இருவரையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்பொழுதுதான் இருவரும் மருந்து குடிக்க வில்லை என்ற விஷயம் டாக்டர்கள் மூலமாக தெரியவந்தது.
அதன்பின் இந்த விஷயம் செல்வியின் பெற்றோருக்கு தெரிந்து மகளிர் காவல்துறையுடன் திண்டுக்கல் வந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்வியை சத்தம் போட்டு பெற்றோருடன் அனுப்பிவைத்தனர் மகளிர் காக்கிகள். ஆனால் செல்வமோ தான் வீட்டுக்கு போக மாட்டேன் வாழ்ந்தால் செல்வியோடு தான் வாழ்வேன் என அடப்பிடித்தனர். ஆனால் சிறுவன் செல்வத்திற்கு திருமண வயது இல்லை என்பதால் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர். ஆனால் இப்படி வயதுக்கு மீறிய காதல் சம்பவம் மேட்டுப்பாளையம் எரியோடு பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.