Skip to main content

சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மரணம்

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

stunt master judo rathinam passed away

 

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பினால் காலமாகியுள்ளார்.

 

93 வயதான ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூடோ ரத்தினம் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

 

எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி அளித்தவர். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருந்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது உடல் அவரின் சொந்த ஊரான குடியாத்தத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவரது இறப்பு குறித்து அறிந்த சினிமா பிரபலங்கள் ஜூடோ ரத்தினத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்