Published on 17/02/2022 | Edited on 17/02/2022
திருச்சி - காரைக்குடி இடையே 89 கி.மீ. ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பாதையில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு நடத்தினார்.
திருச்சியிலிருந்து காலை 09.05 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி மார்க்கத்தில் செல்லும் ஆய்வு ரயிலில் பயணித்த பாதுகாப்பு கமிஷனர், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு மாலை 03.20 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து காரைக்குடி- திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொறுத்தப்பட்ட ரயில் மூலம் வேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ அனுமதிக்கப்படவில்லை.