Skip to main content

யாரும் வருத்தப்படாதீங்க... என்னை மன்னிச்சிருங்க... தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்

Published on 01/08/2018 | Edited on 01/08/2018


 

suicide


திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் கலை-அறிவியல் கல்லூரியில் அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகள் தேன்மொழி (வயது 20) இந்த கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. 
 

 

 

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கல்லூரி விடுதி அறையில் மாணவி தேன்மொழி மட்டும் தனியாக இருந்தார். அவருடன் அறையில் தங்கி இருந்த சக மாணவிகள் வெளியில் சென்று இருந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த மாணவிகள் திரும்பி வந்தபோது தேன்மொழி, மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிர்வாகம் தரப்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார், மாணவி தேன்மொழி தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். 
 

 

 

அப்போது அவர் கைப்பட எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “நான் இதய பிரச்சனையால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். என்னால், வலியை தாங்கி கொள்ளமுடியவில்லை., எனவே, இந்த துயரமான முடிவை எடுக்க முடிவெடுத்தேன். யாரும் வருத்தப்படாதீங்க. கோபப்படாதீங்க, எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்