Skip to main content

அரசுப்பள்ளிகளில் தொடங்கியது மாணவர் சேர்க்கை; இலவசகல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
 Student enrollment started in public schools; Arrange to provide free education equipment

 

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.

 

வருகின்ற 17 ஆம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

 

ஒன்றாம் வகுப்பில் சேர மாணவர்கள் நேரில் வராவிடில் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. சேரும்போதே மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் இருந்தால் காலையில் 20 பேர், மாலையில் 20 பேர் என சேர்க்கை நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்