Skip to main content

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது...

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

 

1, 6, 9-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையும், பிற வகுப்புகளுக்கு அதாவது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் 17-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி சென்னை எழும்பூர் மாநில அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை 17-ந் தேதி முதல் தொடங்கியது. இதேபோல் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை 17-ந் தேதி முதல் தொடங்கியது. 

 

1-ம் வகுப்பை பொறுத்தமட்டில், சில பெற்றோர் கரோனா வைரஸ் தொற்று பயத்தின் காரணமாக தங்களது பிள்ளைகளை அழைத்து வரவில்லை. சில பெற்றோர் குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்டுவராமல் மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்தனர். அந்த பெற்றோரிடம், அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. 

 

கரோனா காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்ததும் காண முடிந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்