Skip to main content

சென்னையில் மறியல்.. பேரணி..! ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
stalin


சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். ஸ்டாலினுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக அதன் தோழமை கட்சியோடு சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று மெரினாவிலும் மறியலில் ஈடுபட்டார்.
 

stalin 2


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சென்னை உள்பட பல இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
 

stalin1


இதனிடைய சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை எதிரே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை நோக்கி வாலாஜபாத் சாலை வழியாக பேரணியாக சென்றனர். கருப்புக் கொடி ஏந்தி ஏராளமானோர் பேரணியாக சென்று மெரினா சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்