ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்கக் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டைத் தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு திறக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழகத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுத்ததுப் போகவே மீதியைப் பிற மாநிலங்களுக்குத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (27/04/2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் ஆலை தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க அதிக வாய்ப்புள்ளது.