கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தா வெளியிட்ட யூடியூப் வீடியோவில் மேட்டூர் அணையில் நீர் வற்றினால் நந்தி சிலை ஒன்று வெளியே தெரியுமே அந்த சிலையை கொண்டுள்ள சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன்.
![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/yXz26sFDfeFmIdu4xiRVWXVas2nuSvrTazSfqVbEQF0/1569069346/sites/default/files/inline-images/zzzzasasasass.jpg)
அந்த சிவன் கோவிலின் மூலவரான சிவ லிங்கம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறியிருந்தார். ஏற்கனவே தனது கட்டளையைக்கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது போன்ற அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவரும் நித்தியானந்தா மேட்டூர் அணைநடுவே உள்ளசிவன் கோவிலில் உள்ள லிங்கம் தன்னிடம் இருப்பதாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/EhcJwDBlZD5T_7dHlsoxcOnQuobCaxRJh-xstkZxFqk/1569069381/sites/default/files/inline-images/download_80.jpg)
இந்நிலையில் நேற்று பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர் திருடிய லிங்கத்தை மீட்டு தரும்படி மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலையத்தில் பாலவாடி வேலுசாமி, சக்திவேல் என்பவர்கள் தலைமையில் ஊர் மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த குறிப்பிட்ட பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு தொடர்புடைய கிராம மக்களிடம் இந்து சமய அறநிலைதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.